மாண்புமிகு ஐயா வணக்கம்... உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்தைப் பாதிக்காமல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் தங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகின்றோம். அதேபோல் மார்ச் 22 நடக்கவுள்ள சுய ஊரடங்கு கடைபிடிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருகிறோம். 

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் திங்கள் கிழமை தேர்வு நடைபெற உள்ளதால் பெரும்பாலான பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சமும் மனஉளைச்சலும் ஏற்படுத்திவருகிறது. 9 லட்சத்திற்கும் மேலாக தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 27 ந்தேதி தொடங்க உள்ள நிலையில் மார்ச் 31 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கல்வி நிறுவனங்கள் மால்கள் தியேட்டர்கள் விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட தமிழக எல்லைகளும் மூடப்பட்டுவருகிறது. கொரோனா வைரஸ் பீதியாலும் கொரானா பரவாமல் தடுத்திடவும் மாணவர்கள் நாலன்கருதி 10.11.12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  ஆவனசெய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன் என வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக இது குறித்து தெரிவித்திருந்த ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் பி கே.இளமாறன்,  மார்ச்-22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ள சுய ஊரடங்கினை வெற்றிப்பெறச் செய்வோம்.  அன்றையத்தினமே இரவு பகலாக தன்னலமின்றி மக்கள் பணியாற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கைத்தட்டி நன்றி செலுத்துவோம். தமிழ்நாட்டின் கரவொலி டெல்லி செங்கோட்டை வரை கேட்கட்டும் தமிழ்நாட்டின் ஒற்றுமை கொரோனா வைரஸை தனிமைப்படுத்தட்டும் என கூறியுள்ளார்.