பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள்,  14  மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் உள்ள 247 அம்மா உணவகங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 658 அம்மா உணவகங்களிலும் எவ்வித தடையுமின்றி யார் வேண்டுமானாலும் உணவு அருந்தலாம் என தமிழக அரசு  ஏற்கனவே  தெரிவித்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களுக்கு 19. 54 கோடி நிதி ,   பிற 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளுக்கு ரூபாய் 1.88 கோடி நிதி என மொத்தம் ரூபாய் 31.39 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .  பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 4.50 லட்சம் ,  பிற மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் 1.75 லட்சம் மற்றும் ஊரக பகுதிகளில் 225 நபர்கள் என்ன மொத்தம் 6.25 லட்சம் பொதுமக்கள் அம்மா உணவகங்களில் உணவு அருந்துகின்றனர் . 

ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை அம்மா உணவுகளில் மொத்தம் 140 . 38 லட்சம் இட்லிகளும் ,  53. 24 கலவை சாதனைகளும் ,  37.85 லட்சம் சப்பாத்திகள் வழங்கப்பட்டுள்ளன .   இதுவரை மொத்தம் 83. 29 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் .  சமுதாய சமையலறைகள் பல இடங்களில் செயல்படுகின்றன ,  ஓசூர்  மாநகராட்சியில் 4 ஆயிரம் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு வீடாக சென்று உணவு நேரில் வழங்கப்படுகிறது .  கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு 3 வேளையும் 49 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன .  பேரூராட்சி பகுதிகளில் 533 இடங்களில் சமுதாய சமையலறைகள் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கும் உணவு இல்லாதவர்களுக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன . 

நாளொன்றுக்கு சராசரியாக 48,000 நபர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது .  இதுவரை 10. 28 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் . வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது .  சமுதாய சமையல் கூடங்கள் மூலம் மாநகராட்சிகள் ,  நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 582 இடங்களில் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன . இதுவரை 10.35 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் .  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சென்னை தவிர பிற 14 மாநகராட்சிகள் 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 12 வகையான காய்கறிகள் அடங்கிய ஒரு பையும் நூறுவீதம் உள்ளாட்சிகளால் தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு ஏப்ரல் 3 முதல் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது .  இது பொதுமக்கள் இடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது . 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 4949 தள்ளுவண்டிகள் , 7 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 110 சிறிய வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 14 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் இதுவரை 1416 நடமாடும் காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன .  பேரூராட்சிகளில் 1295 நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன . ஆய்வுக்கூடத்தில் போது ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக வழங்கவும் கிருமிநாசினிகள் இரண்டுமாத இருப்பை உறுதி செய்யவும் போதுமான அளவில் கிருமி நாசினி தெளிப்பு , பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,  சமூக இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் உறுதி செய்யவும் அனைத்து அம்மா உணவுகளிலும் மூன்றுவேளை சூடான தரமான உணவு வழங்குவதை உறுதி செய்யவும் , 

ஒவ்வொரு அம்மா உணவகம்  மற்றும் சமுதாய சமையலறைகளுக்கு ஒரு அலுவலரை பொறுப்பாக்கி செயல்முறை ஆணைகள் வெளியிட்டு அவர்களின் தொலைபேசி எண் விளம்பரம் செய்து மூன்று வேலைகளும் கண்காணிக்கவும் .  ஒருவர் விடாமல் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும்,  தினசரி காய்கறி  சந்தைகளின் செயல்பாடு மற்றும் தள்ளுவண்டி இலகு ரக வாகனங்களில் தெருக்களில் சென்று காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்திடவும் அனைத்து பொது இடங்களில் துப்புரவு பணியை உறுதி செய்திடவும் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் .