Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain: மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிதமான மழை.

16.12.2021 முதல் 19.12.2021 வரை: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. 

Tamilnadu Rain: People be alert .. Moderate rain in these districts for the next 4 days.
Author
Chennai, First Published Dec 15, 2021, 12:03 PM IST

வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக,15.12.2021,: டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை  மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 16.12.2021 முதல் 19.12.2021 வரை: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும்.

Tamilnadu Rain: People be alert .. Moderate rain in these districts for the next 4 days.

அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 3, தென்பரநாடு (திருச்சி), மரக்காணம் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), அமராவதி அணை (திருப்பூர்), பர்லியார் (நீலகிரி) தலா 2, குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஒட்டனஞ்சத்திரம் (திண்டுக்கல்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), வானூர் (விழுப்புரம்), குன்னூர் (நீலகிரி), வீரகனூர் (சேலம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கடல்குடி (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஏற்காடு (சேலம்), கெட்டி (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), வல்லம் (விழுப்புரம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 15.12.2011 ,19.12.2021: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 15.12.2021,16.12.2021:  இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Tamilnadu Rain: People be alert .. Moderate rain in these districts for the next 4 days.

இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பு:  வரும் 17  ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய  பூமத்திய ரேகை  பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக 17.12.2021 முதல் 19.12.2021 வரை: தென் மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய  பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios