Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain: அட ஆண்டவா.. இன்னும்கூட ஒழியல இந்த ஆபத்து.. அடுத்த 4 நாட்களுக்கு அடிச்சு ஊற்றபோகுதாம்..

03.12.2021: மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி ,  வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tamilnadu Rain: Oh my God .. this danger is still unresolved .. heavy rain next 4 days.
Author
Chennai, First Published Dec 2, 2021, 1:44 PM IST

வெப்பச்சலனம் காரணமாக 02.12.2021: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 03.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் 

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  04.12.2021, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

05.12.2021:நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

Tamilnadu Rain: Oh my God .. this danger is still unresolved .. heavy rain next 4 days.

06.12.2021: நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஈரோடு  (ஈரோடு) 6,  (ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்)  5, ,ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி) தலா 4, சோத்துப்பாறை (தேனி), பர்லியார் (நீலகிரி) தலா 3, ஆண்டிபட்டி (மதுரை), பேராவூரணி (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), குன்னூர் பிடோ (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), போடிநாயக்கனூர் (தேனி), காரைக்குடி (சிவகங்கை), சூரங்குடி (தூத்துக்குடி), நாகப்பட்டினம் (தூத்துக்குடி), (நாகப்பட்டினம்), குடிமியான்மலை (புதுக்கோட்டை) தலா 2, வாடிப்பட்டி (மதுரை), தென்பரநாடு (திருச்சி), வட்ராப் (விருதுநகர்), கோத்தகிரி (நீலகிரி), பாடலூர் (பெரம்பலூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), மானாமதுரை (சிவகங்கை), சீர்காளி (மயிலாடுதுறை), எறையூர் (பெரம்பலூர்), சோழவந்தான் (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), தம்மம்பட்டி (சேலம்), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), மேட்டுப்பட்டி (மதுரை), சத்தியமங்கலம் (ஈரோடு), பரங்கிப்பேட்டை (கடலூர்), தொழுதூர் (கடலூர்), வீரகனூர் (சேலம்), குன்னூர் நீலகிரி), வைகை அணை (தேனி), மீமிசல் (புதுக்கோட்டை), சோலையார் (கோவை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:வங்க கடல் பகுதிகள் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4 ஆம் தேதி காலை நெருங்க கூடும். இதன் காரணமாக.

Tamilnadu Rain: Oh my God .. this danger is still unresolved .. heavy rain next 4 days.

02.12.2021: தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 03.12.2021: மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி ,  வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.12.2021: : மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி ,   ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் 05.12.2021: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios