தமிழகத்தில் யாருடன் கூட்டணி ? பாஜக பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் பேட்டி !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 12, Feb 2019, 9:38 PM IST
tamilnadu political party allaince
Highlights

தமிழகத்தில் பாஜக  கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும் ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும்  என  பாஜக  பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல், மே மாதங்களி;y நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி கணக்குகளை பாஜக மற்று;k காங்கிரஸ் கட்சிகள் போட்டு வருகின்றன. அதிமுக – பாஜக இடையே கூட்டணி குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.  காங்கிரசுடன் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள்   அந்தக் கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே இந்த இரு கூட்டணி குறித்து வெளிவரும் தகவல்கள் குழப்பத்தையே ஏறபடுத்தி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளுடனும் பாமக கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. 

அதே போல் தேமுதிக அதிமுக இல்லாமல் பாஜகவுடன் நேரடியாக கூட்டணி பேசி வருவதாக சுதிஷ் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் யாருடன் யார் கூட்டணி என்பதே தெரியாமல் உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரிக்கு வந்த பாஜக பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும், வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்றும் தெரிவித்தார்.

இன்னும் . ஓரிரு நாளில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் . தமிழகத்தில் பெரிய வெற்றியை எங்கள் கூட்டணி பெறும் என்றும் முரளிதர் ராவ் தெரிவித்தார்.

loader