தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின் பேரில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி தமிழ்நாட்டின் தலைவராக சின்னத் தம்பியும் , அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தலைவராக சாருக் யூராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் உடனடியாக அமலுக்குவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

தமிழ்நாட்டின் தேசிய காங்கிரஸ் மாணவரணி சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதம்பி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி மாணிக் தாக்கூரின் ஆதரவாளர் என்று சொல்லபடுகிறது.