பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்வதாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தற்போது 7 பேரை விடுவிக்கும் வகையில் முடிவு எடுக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும்  என்று கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று தெரிகிறது. 

இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தித்துக்கு பிறகு ஜெயக்குமார், 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானமாக இது அமைந்துள்ளது.