Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் வகுப்புகள் தொடர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்..!! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி..!!

ஆன்லைன் வகுப்பில் அணைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் வகையில் லேப்டாப் அல்லது டேப் அல்லது குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு செல்போனாவது வழங்கி உதவிடவேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம்.
 

tamilnadu  government school teachers demand laptop for all government school students for online class
Author
Chennai, First Published Jul 8, 2020, 5:39 PM IST

அரசுபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது வரவேற்புக்குரியதாக உள்ள நிலையில், அதை முறையாக பின்பற்ற அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கி அரசு உதவ வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- 2020-21 கல்வி ஆண்டு தொடங்கியும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கமுடியாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் தொடரப்படும் என்ற அரசின் அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு  நடாவடிக்கை காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள். படித்தவைகள் மட்டுமல்ல, எழுத்துகளே மறந்துபோகும் சூழல் உருவாகியுள்ளது. 

tamilnadu  government school teachers demand laptop for all government school students for online class

இந்நிலையில் அரசு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், மறுபுறம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான அரசுபள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதாராத்தில் பின்தங்கியவைகளாக உள்ளன. அம்மாணவர்கள் தினக்கூலி வேலைசெய்யும் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பட்டன் போன்களை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்  ஆன்லைன் வகுப்பு என்ற அறிவிப்பு வந்திருப்பது, அவர்களுக்கு ஒருவகையில் மகிழ்ச்சியளித்தாலும், மறுபுறம் அந்த வகுப்புகளில் தங்கள் குழந்தைகள் பங்கேற்க இயலாமல் போகுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது? தங்களிடம் அதற்கான ஆன்ட்ராய்டு போன் வசதியில்லையே என்ற ஏக்கம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் ஆன்லைன் வகுப்பில் அணைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் வகையில் லேப்டாப் அல்லது டேப் அல்லது குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு செல்போனாவது வழங்கி உதவிடவேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 

tamilnadu  government school teachers demand laptop for all government school students for online class

அதேபோல், புத்தகம் மற்றும் நோட்டுகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இனி பேரிடர்காலம் மட்டுமல்ல எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதும் கட்டாயம். ஆன்லைன் பயிற்சியினை பயமின்றி பாதுகாப்பாக கற்க வசதியாக அரசே புதுச்செயலியினை உருவாக்கி நெறிமுறை வகுத்து முறைபடுத்தவேண்டும். EMIS போன்ற இணையதளத்துடன் இணைத்து அவை கண்காணிக்கப்படவேண்டும். ஆட்கொல்லி நோயான பெருந்தொற்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வெறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியது. தற்போது பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் அவசியமாகிறதை உணர்ந்து அரசு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது வரவேற்புக்குரியது. மேலும் அரசுபள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆன்ட்ராய்டு போன் வழங்க உடனே அரசு ஆவனசெய்யவேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios