தமிழக அரசு ஊழியர்கள் பெறும் பரிசு பொருட்களின் உச்சவரம்பை ரூ.5000-த்திலிருந்து ரூ.25,000 வரை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளார். 

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து, திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று விதிமுறை இருந்து வந்தது. 

இந்நிலையில் இந்த உச்சவரம்பை 25,000 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. திருமணங்கள், பிறந்தாள் விழாக்கள், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடத்திலிருந்து ரூ 25,000 வரை பெற்றுக்கொள்ளலாம். 

அவர்கள் பெற்ற பரிசு பொருட்கள் பற்றிய விவரங்களை அரசிடம் ஒரு மாதத்திற்குள் தகவல் தெரிவிக்கவேண்டும். மொத்தத்தில் பரிசாகப் பெறக்கூடிய  தொகையின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் அல்லது 6 மாத முழு ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.