Asianet News TamilAsianet News Tamil

வேஷ்டி உருவும் கோஷ்டி கட்சிக்கு தலைவராகிறார் பீட்டர் அல்போன்ஸ்?

புலி வருது புலி வருது என்கிற கதையாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இப்போது புலி வருவது உறுதியாகிவிட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக விரைவில் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட உள்ளார். 

Tamilnadu congress committee president...peter alphonse
Author
Tamil Nadu, First Published Dec 24, 2018, 3:55 PM IST

புலி வருது புலி வருது என்கிற கதையாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இப்போது புலி வருவது உறுதியாகிவிட்டது. தமிழக காங்கிரஸ் தலைவராக விரைவில் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட உள்ளார்.   

தமிழ காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சமிருக்காது. திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள், கோஷ்டி மோதல்கள், வேட்டி உருவுதல் போன்றவை அரங்கேறும். Tamilnadu congress committee president...peter alphonse

தற்போது அக்கட்சியின் தமிழக தலைவராக திருநாவுக்கரசர் உள்ளார். அவருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ஏழாம் பொறுத்தம். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைந்து செயல்படாத போக்கும் நிலவியது. கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ராயப்பேட்டையில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். பின்னர் திருநாவுக்கரசரே சமரசம் செய்து வைத்தார். Tamilnadu congress committee president...peter alphonse

விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதுபோன்ற கோஷ்டி பூசல் நிலவி வந்தால் வெற்றி என்பது இறுதிவரை கேள்வி குறியாகிவிடும். இதற்கு எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் விதமாக காங்கிரஸ் தலைமை தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Tamilnadu congress committee president...peter alphonse

இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு கல்தா கொடுத்துவிட்டு பீட்டர் அல்போன்ஸை தலைவராக நியமனம் செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பீட்டர் அல்போன்ஸ் மூப்பனார், கருணாநிதி, ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். முதலில் மூப்பானாருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விட்டு பின்னர் ஜி.கே.வாசனுடன் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்து சேர்ந்தவர். மேலும் கருணாநிதி திறப்பு விழாவின் போது ராகுல் பேச்சை திருநாவுக்கரசரும், சோனியா பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார்.

இதில் பீட்டர் அல்போன்ஸ் பாஸ் ஆகிவிட்டார். திமுகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே பீட்டர் அல்போன்ஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios