Asianet News TamilAsianet News Tamil

உடனடி நடவடிக்கை தேவை.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டலின்

இந்தியா – இலங்கை மீனவர்கள் இடையே காலம் காலமாக தொடரும் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tamilnadu cm stalin write letter to pm regarding fishermens arrest
Author
Chennai, First Published Oct 15, 2021, 5:47 PM IST

இந்தியா – இலங்கை மீனவர்கள் இடையே காலம் காலமாக தொடரும் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையின் செயலைக் கண்டித்துள்ள மீனவர்களின் உறவினர்கள், இலங்கை அரசு கைது செய்தவர்களை மீட்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tamilnadu cm stalin write letter to pm regarding fishermens arrest

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை கடற்படையால் நாகையை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே தொடரும் இப்பிரச்சினையில், பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்திட வழிவகை செய்ய வேண்டும்.

Tamilnadu cm stalin write letter to pm regarding fishermens arrest

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்கள், அவர்களின் படகுகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதற்காக இலங்கை அரசிடம் இப்பிரச்சினையை உறுதியாக எடுத்துச் செல்ல வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு, உரிய வழிமுறைகளை கையாண்டு இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios