Asianet News TamilAsianet News Tamil

நீட் மாணவர்களை கொல்லக்கூடியது.. இது தேர்வு அல்ல ; பலிபீடம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு !!

ஏழை மாணவர்களை ஓரங்கட்டவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது. நீட் என்பது தேர்வு அல்ல.அது மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம் என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Tamilnadu cm mk stalin speech in tn assembly today about neet exemption bill
Author
Tamilnadu, First Published Feb 8, 2022, 12:56 PM IST

'100 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் போட்டது இந்த சட்டமன்றம் என தெரிவித்தார். அகில இந்திய அளவில் மண்டல கமிஷன் அறிக்கையை செயல்பட வைத்தது இந்த சட்டமன்றம் என பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அளித்தது இந்த சட்டமன்றம். 2010-ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்ட போதே திமுக கடுமையாக எதிர்த்தது' என சிறப்பு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக அரசு தான் என கூறினார். நீட் தேர்வு என்பதை விட அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும் என தெரிவித்தார். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?

Tamilnadu cm mk stalin speech in tn assembly today about neet exemption bill

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை. நீட் தேர்வு வானத்தில் இருந்த குதித்துவிடவில்லை. பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல.

நீட் என்ற சமூக அநீதியை அகற்ற சட்டமன்றத்தால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டுருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு சமூகநீதியை நிலைநாட்டிட கூடியிருக்கிறோம் என கூறினார். நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல எனவும் தெரிவித்தார். 

Tamilnadu cm mk stalin speech in tn assembly today about neet exemption bill

69% இடஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல்முறையாக செயல்படுத்தி சாதனைப்படுத்தியது இந்த சட்டம் தான். நீட் என்ற சமூக நீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால் முடியும். அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது அல்ல நீட் தேர்வு. கட்டணம் செலுத்துவப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பது அறிவு தீண்டாமை. தகுதி என்ற பெயரில் உள்ள அறிவு தீண்டாமை அகற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பயிற்சி பெற முடியாதவர்கள் நீட் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை இருக்கிறது’ என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios