என்ன சதித்திட்டம் தீட்டினாலும் உள்ளாட்சித் தேர்தலை திமுகாவால் நிறுத்த முடியாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி   பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பெரிய மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக புதிய மாவட்டங்களை அறிவித்திருக்கிறார்.  இந்நிலையில்  வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்கப்பட்டு,  வேலூர்,  ராணிப்பேட்டை ,  திருப்பத்தூர் ,  ஆகியவற்றை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார் .  திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா  தொன்போஸ்கோ நகரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்தடுப்பு மருந்தக மைய வளாகத்தில் நடைபெற்றது.  திருப்பத்தூர் 35 வது  மாவட்டமாகவும் ,  ராணிப்பேட்டை 36வது மாவட்டமாக உதயமாகியுள்ளது . 

 

அப்போது பேசிய அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் .  அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டினார் .  எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவால் நடத்த முடியாது எனவும் அவர் சவால் விடுத்தார்.