Former Chief Minister passed away on the 5th of December
கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். அந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து ஜனவரி 23ம் தேதி கவர்னர் உரையுடன் இந்தாண்டுக்கான சட்டமன்றம் கூடியது. அதில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான மசோதா வரைவோலை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அறிவிப்பு தேதி வெளியிடாமல், சட்டமன்றம் முடிந்தது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்படுகின்றன. இதற்கிடையில், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் வரும் 16ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. இதில் 2017 - 18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார். 23ம் தேதி முன் பண மானியு கோரிக்கை நடை பெறுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்று, முதல் சட்டமன்ற கூட்ட தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
