தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த முறை தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் எப்படியாவது பாஜக பலத்தை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு வியூகங்கை வகுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசாமிற்கு மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், கேரளத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுவைக்கு மத்திய இணை அமைச்சர்அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.