நல்ல திட்டங்களை இந்த அரசு அறிவித்து மக்கள் மனதை கவர நினைத்தாலும் அதை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை. உங்களை மக்கள் ஏற்றுகொள்ளவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்மைச்சர் அறிவித்த 5 திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:

 திட்டங்கள் நல்ல திட்டங்கள். அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் பிரதானமாக அறிவித்திருப்பது ஊழலற்ற நேர்மையான அரசாக இருக்குமா எனபதே.

நீங்கள் என்னதான் பிரபலாமான மக்கள் விரும்பும் திட்டங்களை அறிவித்தால் மக்கள் ஏற்றுகொள்வார்களா? மக்கள் முதலில் உங்களை ஏற்றுகொள்கிறார்களா? எனபதை பார்க்க வேண்டும். இதை ஏற்றுகொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. இவ்வாறு கருத்து தெரிவித்தார்.