தமிழக பா.ஜ.க தலைவராக .தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறை பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.  வரும் டிசம்பர் மாதத்துடன்  அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில்தான்  தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழிசைக்கு எதிர்க்கட்சி உள்பட பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில், ஆளுநருக்கான நியமன ஆணையை  தமிழிசை இன்று பெற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழிசை வருகிற 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும்  பாலமாக இருந்து செயல்படப் போவதாக தெரிவித்தார்.