பிரதமர் மோடியை சாடிஸ்ட் என கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை இனிமேல் சாடஸ்ட்  என அழைக்கப்படுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தானின் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது திருமண விழாவில் பேசிய ஸ்டாலின் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவரை சாடிஸ்ட் என்று கூறினேன். தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் போது உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல் இருந்த பிரதமரை சாடிஸ்ட் என்று சொல்வதில் என்ன தவறு. எனவே தற்போது உறுதியாக சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்டு என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.  

பிறகு அமைந்தகரையில் பாஜக நிர்வாகிகளோடு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். இதற்கான நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. நீங்களா, நாங்களா என ஒரு கை பார்ப்போம் என தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை மக்களை பாஜக மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை என்று கூறினார். ராகுல்காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குகின்றனர். மேலும் பிரதமர் மோடியை சாடிஸ்ட் என கூறி வருகிறார் ஸ்டாலின். அதனால் அவரை இனி சாடஸ்ட் ஸ்டாலின் என அழைப்போம் என தமிழிசை பேட்டியளித்துள்ளார்.