அண்ணன் வைகோவின் புகழ்ந்துட்டாரு அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவில், அதிமுக அமைச்சர்களை பாராட்டும் அண்ணன் வைகோ...? அமைச்சர்களின் களப்பணி பாராட்டுக்குரியது என்றாலும் துரைமுருகனின் பதிலால் காயப்பட்ட வைகோவின் புகழுரையில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
Scroll to load tweet…
அதே போல, முதலமைச்சர் வெள்ளச்சேதங்களை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றதை விமர்சித்த ஸ்டாலின் சேலத்தில் தன் உதவியாளர் இல்லத்திருமணத்திற்காக சொந்த சொகுசு விமானத்தில் பயணம்? ஏழை பங்காளர்கள் ! என்றும் விமர்சித்துள்ளார்.
Scroll to load tweet…
மனம் இட்டு பாராட்டிய ஒருவரை தமிழிசை இப்படி மரண கலாய் கலாய்க்கலாமா? என்னதான் இருந்தாலும் வைகோ பெரியமனுஷன் இல்லையா? என தமிழிசையின் இந்த செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.