தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தான் தாங்கிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. நம் நாடு பாதுகாப்பாக உள்ளது, என்றால் அதற்கு காரணம் பாஜக அரசு தான். தேர்தல் தேதியை அறிவிக்கவிடாமல் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு முடக்கி வைத்துள்ளது என்று தவறான ஒன்று என்றார். 

தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் மெகா கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தின் உச்சியில் இருந்து வருகிறார்.

 

வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நம்நாடு பாதுகாக்க இருக்க வேண்டும் என்றால் மோடி பிரதமராக மீண்டும் வர வேண்டும். மக்களவை தேர்தலில் கட்சி எங்கே போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். தமிழகம் முழுவதும் சென்று வருவது போல் தூத்துக்குடியில் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் வருவதால் அடிக்கடி சென்று வருகிறேன் என்று தமிழிசை பேட்டியளித்துள்ளார்.