ஐ.என்.எஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் , அவர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது . ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் தொடங்கின. ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்ற அதிகாரிகள் ,அங்கு அவர்  இல்லாததால்   திரும்பி வந்துவிட்டனர். 

இந்த கைது நடவடிக்கை குறித்து ட்விட்டரில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார்  பாஜக தலைவர் தமிழிசைக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் . அதில் " முன்னாள் மத்திய நிதி அமைச்சரை கைது செய்தால் பொருளாதார மந்த நிலை சரியாகிவிடுமா ??" என்று கேட்டறிருக்கிறார் .

அந்த ட்விட்டை பகிர்ந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் " சொல்லுங்க அக்கா " என்று தமிழிசையை டேக் செய்து இருந்தார் . 

அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் , " வங்கியில் போடுவதாக சொல்லாத 15 லட்சம் கருப்பு பணம் எங்கே ? எங்கே ? என்று வாழைப்பழ காமெடி கதை போல கேள்வி கேட்ட அரசியல் காமெடியர்களுக்கு பதில் தர வேண்டி பதுக்கியவர்கள் , சுருட்டியவர்கள் , தேடப்படுகிறார்கள் ?? என்று கேள்விக்குறியோடு பதிவு  செய்துள்ளார் .