9 மணிக்கு தமிழிசைக்கு வந்த முக்கிய போன் கால்..!  "அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்"...! 

தமிழகத்தில் பாஜக எப்படியும் கால் ஊன்ற முடியாது  என்ற நம்பிக்கையில் அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து கட்சிக்காக பாடுபட்டு வந்த தமிழிசைக்கு இன்றுதான் மாபெரும் ஒரு பதவியில் அமர்த்தி உள்ளது பாஜக

கட்சி வேளையில், சென்னையில் காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் விமான நிலையத்தில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மதியவேளையில் வேறு ஒரு விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு தினந்தோறும் தாமதமாக வீட்டிற்கு செல்ல கூடிய அளவிற்கு ஓடாய் உழைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். அவருடைய முழுமுதற்கட்சிப் பணிக்காக அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தெலுங்கானா ஆளுநராக பதவி கிடைத்துள்ளது.

இதில் ஒரு விஷயத்தை உற்று நோக்கி பார்த்தால், வெளி அரசியல் வட்டாரத்தில் தமிழிசைக்கு பதவி முடியப்போகிறது என்று ஒரு பேச்சும் அடிபட்டு வந்த நிலையில், இதைவிட அருமையான ஒரு பதவி கிடைக்குமா என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை... ஆனால் அதற்கான ஒளிவட்டம் ஒரு வார காலமாகவே தென்பட்டது பின்னர் இன்று காலை தான் அதிகார பூர்வமாக தமிழிசைக்கு தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி மதிய வேளையில் பிரேக்கிங் நியூஸாக வெளிவந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் இப்படி ஒரு பதவி தனக்கு காத்திருக்கிறது என்பது தமிழிசை அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே தெரிந்தும் கூட இன்று காலை தான் டெல்லி மேலிடத்திலிருந்து முக்கிய புள்ளி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து  தெரிவித்து உள்ளாராம். அதன்பின்னர் தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளங்களில் இதற்கு முன்னதாக தமிழிசை வைத்து  மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வந்தவர்களுக்கு எல்லாம் நெத்தியடி கொடுக்கும் விதமாக அதே சமூக வலைத்தளத்தில் இன்று தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துக்கள். குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு பெயர்தான் அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் என்று கூட சொல்லலாம். வாழ்க்கை என்பது சுழன்று கொண்டே இருக்கும்.. யாருக்கு எப்போது... எங்கே எப்படி டர்னிங் பாயிண்ட் இருக்கும் என்பது கணிக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது  தமிழிசையின் அடுத்தகட்ட அதிகாரபூர்வ ஆளுமைத்திறன் பதவி