tamilisai questions stalin about neet
எந்த பிரச்சனை குறித்து பேச்சு எழுப்பினாலும், மு.க.ஸ்டாலின் எதற்காக பதற்றப்படுகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயலத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது குறித்து, பல்வேறு தரப்பினர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
அவர்களுக்கு எந்த அளவுக்கு மாணவர்கள் மீது அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது.

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தயார் செய்ய வேண்டும். ஆனால், சில அமைப்பினர் அவர்களுக்கு தயக்கம் காட்டி, பயத்தை ஊட்டுகின்றனர்.
மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைகிறார். தேர்தல் என்றாலும் பதற்றம், தேர்வு என்றாலும் பதற்றம் என்றே காணப்படுகிறார். அவரது பதற்றத்தை குறைத்து கொள்வது அனைத்துக்கும் நல்லதாகவே அமையும்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி விரைவில் தமிழக விவசாயிகள் சந்தத்து பேச இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
