tamilisai questions kamal
எவ்வளவு பிரச்சனைகளுக்கு கமல் குரல் கொடுத்தார் எனவும், திடீரென கமல் ஏன் அரசியலுக்கு வருகிறார் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வது கமலுக்கு வழக்கம். அதேபோல் பிக்பாஸ் பிரச்சனைக்கு விளக்கம் அளிக்க வந்து அரசியல் பிரச்சனையில் மாட்டி கொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது, சிஸ்டம் சரியில்லை என கருத்து தெரிவித்தார்.
அதற்கு தமிழக அமைச்சரவை பொங்கி எழுந்து விட்டது. ஆதாரம் இருந்தால் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடரப்படும் என அமைச்சர்கள் ஆளாலுக்கு சரமாரியாக பேச ஆரம்பித்து விட்டனர்.
இரண்டு நாட்கள் அமைதியாக விட்ட கமல் தமது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பிவிட்டார்.
அதாவது, தோற்று இருந்தால் நான் போராளி; முடிவெடுத்தால் நானும் முதல்வர் எனவும், போடா மூடா என்றாலும் தேடாத பாதைகள் தென்படாது, வாடா தோழா என்னுடன் மூடமை தவிர்க்க எனவும் டிவிட்டரில் பதிவு செய்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ரஜினி ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துக்களை கூறிக்கொண்டு இருந்தார் ஆனால், எவ்வளவு பிரச்சனைகளுக்கு கமல் குரல் கொடுத்தார் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், திடீரென அரசியலுக்கு வர கமல் துடிப்பது ஏன் ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
