Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியா..? தமிழிசை பரபரப்பு தகவல்..!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழகக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். 

tamilisai press meet
Author
Tamil Nadu, First Published May 24, 2019, 6:31 PM IST

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழகக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் மற்றும் மே 19-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் ஆளும் கட்சியான அதிமுக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் மட்டும் வெற்றி பெற்றார். இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் ரவீசந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. tamilisai press meet

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படுமா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி தருவது பற்றி பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்றார். மேலும் தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே என்று கூறினார். tamilisai press meet

இதைத்தொடந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை. அமலும் தேனி தொகுதியில் குடிநீர் பிரச்னையை முழுவதுமாக தீர்க்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios