Asianet News TamilAsianet News Tamil

நம்ம கட்சியில் இருந்துகிட்டு அழிக்கணும்னு நினைக்கிறாங்க... அமித்ஷாவிடம் தமிழிசை பகீர் புகார்... என்ன தெரியுமா?

tamilisai no reaction after RK Nagar BY poll Loss their victory
tamilisai no reaction after RK Nagar BY poll Loss their victory
Author
First Published Jan 10, 2018, 3:57 PM IST


கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை பிஜேபி தரப்பில் இருந்தோ, தமிழிசை தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வமான மறுப்போ, அதற்க்கான பதிலோ இருவரை இல்லை.

‘ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவை விட குறைவாக வாக்குகளை வாங்கி தொடர்தால், அரசியல் கட்சிகள் அனைத்து ஒரே மாதிரியாக கடுமையாக கலாய்த்து வருகின்றனர். இது போதாதுன்னு சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருத்தேடுக்கின்றனர் வலைதளவாசிகள். என்னதான் இவர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக கூடி வந்து கலாய்த்தாலும்   எல்லோரையும் சமாளித்து பேசுவதை தமிழிசையை அடித்துக்கொள்ள முடியாது. வெளியில் உள்ளவர்களை சமாளித்தாலும், தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி அரசியலை சமாளிக்க முடியவில்லையாம்.

tamilisai no reaction after RK Nagar BY poll Loss their victory

ஆரம்பத்தில் இருந்தே தமிழிசைக்கும், மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சில மன வருத்தங்கள் இருந்து வருகிறது. தமிழிசை சொல்வதை பொன்னார் ஆட்கள் கேட்பதே இல்லையாம். சமூக வலைத்தளங்களில் அருவறுக்கத்தக்க வகையில் மீம்ஸ்கள் வந்த வந்தவண்ணம் உள்ளது. தமிழிசைக்கு தொடர்ந்து செல்பேசி வாயிலாக மிரட்டல்கள். இதனால் கடும் மனவுளைச்சலில் இருந்த தமிழிசை போலீசில் புகாரும் செய்துள்ளார்.

அதன் பிறகு வந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில், பிரசாரத்துக்குப் போன இடங்களில் எல்லாம் தமிழிசை பொன்னார் ஆட்கள் கலாய்த்துள்ளார்கலாம். அதுமட்டுமல்ல, தமிழிசையின் பிரச்சாரம் எடுபடாமல் போக பாஜகவிற்கு எதிராக பிரசாரம் செய்தார்களாம்.

இதனால் கடும் மனவுளைச்சலில் இருந்த தமிழிசை ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்குப் பின் அமித்ஷாவிடம் பேசினாராம் தமிழிசை. ‘நான் எப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால், தமிழ்நாட்டுல நம்ம கட்சியில் இருக்கும் சிலருக்கு என்னைப் பிடிக்கலை. அதனால எனக்கு அவ்வளவு தொல்லை கொடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு கட்சியையும் பலிகடா ஆக்கிட்டு இருக்காங்க. ஆர்.கே.நகரில் நாம் கட்சி படு தோல்வி அடைய காரணமே நம்ம கட்சியில் இருக்கும் சிலர்தான்.

tamilisai no reaction after RK Nagar BY poll Loss their victory

நான் என்ன சொன்னாலும் யாரையும் நீங்க விசாரிக்க மாட்டீங்க... அப்புறம் எதற்காக நான் தமிழக தலைவராக இருக்கணும்? நீங்க எல்லோரும் சொன்னதால்தானே நான் தலைவராக இருக்கேன். தமிழகத்துல நான் கட்சியை வளர்க்கணும்னு நினைக்கிறேன். ஆனால், நம்ம கட்சியில் இருக்கும் சிலரே கட்சியை அதை அழிக்க நினைக்கிறாங்க. நீங்க யாரை வேணும்னாலும் நம்புங்க.. என்னை ஆளை விடுங்க’ என என சொல்லிவிட்டு. டெல்லிக்கு ராஜினாமா அனுப்பிட்டாராம் தமிழிசை.

என்னதான் இருந்தாலும் நாம பேசி சரிசெய்து கொள்ளலாம். நீங்க அமைதியாக இருங்க.. இப்படி தவாறன முடிவை நீங்கள் எடுக்கவேண்டாம் என சொன்ன அமித்ஷா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.’ என தமிழிசையை சமாதானப்படுத்தினாராம் அமித்ஷா. ஆனால், தமிழிசையோ  ராஜினமா மூடில் இருக்கிறாராம் தமிழிசை...

Follow Us:
Download App:
  • android
  • ios