ஒரு கட்டத்தில் அவருடைய உருவத்தை வைத்தும் தலை முடியை வைத்தும், உயரத்தை வைத்தும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசுவதையும் வைத்து அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழிசையை வறுத்தெடுத்தனர். உருவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகளவில் கிண்டலுக்கு ஆளானவர் தமிழகத்தில் தமிழிசை மட்டுமே.

“என்னை வெச்சு செஞ்சுட்டீங்க. மீம்ஸை அவர்கள் இனியும் தொடர வேண்டும் என்றால் தொடரட்டும். அதை என் இதயத்துக்குக் கொண்டு செல்ல மாட்டேன்” என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வரும் 8-ம் தேதி தெலங்கானா ஆளுநராக அவர் பதவியேற்க உள்ளார். தமிழிசை தமிழகத்திலிருந்து செல்ல உள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சோகத்தில் உள்ளார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியாக கண்டண்ட் கொடுத்தவர் தமிழிசை. அவருடைய பேட்டிகளை வைத்து உடனுக்குடன் மீம்ஸ் வெளியிட்டு கிண்டலடிப்பார்கள்.