Asianet News TamilAsianet News Tamil

பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு போகணும் - செம கலாய் கலாய்த்த தமிழிசை

tamilisai criticized tamilnadu government
tamilisai criticized tamilnadu government
Author
First Published Jan 27, 2018, 10:10 AM IST


டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 50% முதல் 100% பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்த சுமையை மக்களின் தலைமீது ஏற்றியது அரசு.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி மற்றும் மாத ஊதியதாரர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை.

இதனால், சுமார் 25 லட்சம் பேர் அரசு போக்குவரத்தை புறக்கணித்து ரயில்கள், தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அரசுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினாலும் அரசு கண்டுகொள்வதாயில்லை.

இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்ற காலம் போய், பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என விமர்சித்துள்ளார்.

பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு செல்லும் அளவிற்கு கட்டணத்தை அரசு உயர்த்திவிட்டதாக தமிழிசை கிண்டலடித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios