அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதை இருப்பதை வைகோ அரசியலாக்குறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாமுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு கடந்த 27 ஆம் தேதி பிரதமர் மோடி அதை திறந்து வைத்தார். அந்த மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலையில் உள்ள அவரது கரத்தில் பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்துல் கலாமுக்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.

மேலும், அபதுல்கலாமின் கரங்களில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்கலாமே எனவும், திருக்குறளை விட பகவத் கீதை பெரியதா எனவும் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதப் பிரச்சனையைத் தூண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதை இருப்பதை வைகோ அரசியலாக்குறார் என குற்றம் சாட்டினார்.