Bjp tn State leader tamilisai condemned petrol diesel price hike
பெட்ரோல், டீசல், மற்றும் பால் விலை உயர்வுக்கு தமிழ்மாநில பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையை பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே இதுவரை உயர்த்தி வந்தன. ஆனால் பெட்ரோலிய பொருட்கள் மீது தமிழக அரசு உயர்த்திய வாட் வரி விதிப்பால் தமிழகத்திற்கு மட்டும் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணமதிப்புநீக்க நடவடிக்கையின் பாதிப்பின் தாக்கமே இன்னும் தணியாத நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும்….
இதற்கிடையே தமிழகத்தில் எப்படியாவது கால்பதித்தே ஆக வேண்டும் என்று தீவிரமுணைப்பு காட்டி வரும் பா.ஜ.க. எடப்பாடி அரசின் வாட் வரி உயர்வுக்கு தனது கண்டனத்தை முதலில் பதிவு செய்துள்ளது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.தமிழ்மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
பால் விலையும் உயர்ந்திருப்பது தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருப்பதாகவும் தமிழிசை வேதனை தெரிவித்தார்..
