சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த விழாவிற்கு பாஜக தலைவர் தமிழிசை பயணம் மேற்கொண்டார். அப்போது விமானத்தில் மிக அருகாமையில் உள்ள இருக்கையில் சோபியா தனது அம்மாவுடன் அமர்ந்திருந்தார். பின்னர் விமானத்திலிருந்து வெளியே வந்தப் பிறகுதான் சோபியா தமிழிசை விவகாரம் வெடித்து வெளியே தெரிந்தது.

விமானத்தில் உண்மையாகவே நடந்தது என்ன என  முழுமையாக  விசாரித்தோம், தமிழிசையின் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சோபியா ஆரம்பத்திலிருந்தே அனைவரின் காதுபட மோடி அரசையும், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையையும் கன்னா பின்னா வென விமர்சித்து தனது அம்மாவிடம் பேசி வந்தாராம். 

"பாசிச பாஜக ஒழிக என மாணவி சோபியா முழக்கமிட்டதாக தெரியவில்லை ஆனால், தமிழிசையின் பக்கம் பார்த்து அசிங்கமாக சோபியா திட்டியதாகவும் விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.  

சோபியாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துப் போய் எதிர்க் கேள்விக் கேட்டுள்ளார். ஆனால் சோபியாவோ, "ச்சும்மா... பொத்திக்கிட்டு உட்காரும்மா" மெரட்டுர வேலையெல்லாம் எங்கிட்டே வச்சிக்காதிங்க...  என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

சோபியா ஒருமையில்  கண்டபடி பேசிவந்ததை வெளியில் சொல்லமுடியாமல் தமிழிசை அதனை  மறைக்கவே  அப்படி ஒரு கோஷம் எழுப்பியதாக  கூறப்படுகிறது.

இதுதான் தமிழிசையின் கொந்தளிப்புக்கு காரணமாம். இந்த ஆத்திரத்தில்தான் பாசிஸ்ட் பிஜேபி ஒழிக என்று கோஷம் போட்டாள் என  போகிற போக்கில் சோபியா பேசியதை ஹைலைட்டாக்கி  பேசி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம் தமிழிசை சவுந்தரராஜன்.