Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் பதவி- உள்ளே தமிழிசை; வெளியே சதாசிவம்... நேர் செய்யப்பட்ட தமிழர் கணக்கு!

ஒரு தமிழரின் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இன்னொரு தமிழர் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வகையில் கணக்கு நேர் செய்யப்பட்டிருக்கிறது.

Tamilians in Governor post...
Author
Chennai, First Published Sep 2, 2019, 8:07 AM IST

ஆளுநர் பொறுப்பிலிருந்து ஒரு தமிழர் ஓய்வு பெற உள்ள நிலையில், இன்னொரு தமிழருக்கு ஆளுநர் பதவி கிடைத்திருக்கிறது.Tamilians in Governor post...
தெலங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராகும் பெருமையும் கிடைத்திருக்கிறது. 5 ஆண்டுகள் கழித்து தெலங்கானா மாநிலத்துக்கு என தனி ஆளுநராகவும் தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தெலங்கானா ஆளுநராக இருக்கும் நரசிம்மன், தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக செயல்பட்டு வந்தார். அப்படி பார்த்தால், தெலங்கானாவின் முதல் முழு ஆளுநரும் தமிழிசைதான்.Tamilians in Governor post...
தெலங்கானா மாநில ஆளுநராக  தமிழரான தமிழிசை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு தமிழரான கேரள ஆளுநர் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், கடந்த 2014-ல் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டு மோடி ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், அடுத்த சில மாதங்களில் கேரள மாநில ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்டார். வரும் 5-ம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. 
ஒரு தமிழரின் ஆளுநர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இன்னொரு தமிழர் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வகையில் கணக்கு நேர் செய்யப்பட்டிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios