ஐயப்ப பக்தர்கள் காவிவேட்டி கட்டுவார்கள். ஆனால் ஓபிஎஸ் காவி வேட்டி கட்டியது மோடி சாமிக்காகவே என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் அவசரமாக எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய நினைப்பது அதிமுகவின் பயத்தை காட்டுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமமுக தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். திமுக, அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குகிறார்கள். 

தமிழக மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவினர், திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்பது மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அமமுகவிற்கு தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் வாக்களிப்பார்கள், தமிழக மக்களுக்கு எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதையே அமைச்சர்கள் பிரச்சாரங்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். 

ஓபிஎஸ் காவி வேட்டியை கட்டிகொண்டு மோடி சாமியை வணங்கதான் வாரணாசி சென்று வந்தனர். ஆளுநர் பதவியை பெற்றுகொண்டு அரசியல் வாழ்வை முடித்துகொள்ளலாம் என ஓபிஎஸ் நினைத்து கொண்டிருக்கிறார். பதவிக்காக எதையும் செய்யகூடிய நபர் தான் ஓபிஎஸ். பிரதமர் மோடி சொல்வது படியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பாடுகிறார்கள். ஓட்டை பிரிக்கும் கட்சி அமமுக அல்ல, வெற்றிபெறும் கட்சியாக உள்ளது. அதிமுகவை நாங்கள் பிரிக்கவில்லை நாங்கள் உண்மையான அதிமுக என்பதை தேர்தல் முடிவிற்கு பின் மக்களே அடையாளம் காட்டுவார்கள், தேர்தல் முடிவிற்கு பின் அதிமுக காணமால் போகும் அமமுக தான் அதிமுக என்பதை நிருபிப்போம் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.