தனது ஆபாச வீடியோ ஆர்.எஸ்.எஸ் அல்லது நாம் தமிழர் போன்ற கோழைகளின் கோழைகளின் செயல் என தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளார். 

திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரசன்னா இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து தமிழன் பிரசன்னா என்று அழைத்து கொள்வார். மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடியவர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு  பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை பெற்றவர். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிரசன்னா உருவம் கொண்ட ஒருவர் டி.வி. நடிகையுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோ குறித்து தமிழன் பிரசன்னா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா இது குறித்து இப்போது மவுனம் களைத்துள்ளார். "அந்த வீடியோவில் இருப்பது நானல்ல. இது ஆர்.எஸ்.எஸ் அல்லது நாம் தமிழர் போன்ற கோழைகளின் செயல். இதுபோன்ற கோழைகளின் செயலுக்கு நான் அஞ்சப்போவதில்லை, அதில் இருப்பது நான் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் குறிக்கோலை நோக்கி செல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.