Asianet News TamilAsianet News Tamil

பிரான்ஸ், நெதர்லாந்தில் இருந்து தமிழகம் வரும் போதை மருந்துகள்.? ஒரு மாத்திரை 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயா.?

2 பார்சல்களில் இருந்து ரூ. 5 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுர்ந்த 105 போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். 
 

Tamil Nadu youths targeted by drug gangs? Is a pill 5 thousand to 50 thousand rupees?
Author
Chennai, First Published Jul 1, 2021, 9:42 AM IST

பிரான்ஸ், நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை  விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பாா்சல்களை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும் பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள  முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன. 

Tamil Nadu youths targeted by drug gangs? Is a pill 5 thousand to 50 thousand rupees?

அந்த பார்சலில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் போதை பொருள் மாத்திரைகள் கடத்தப்பட்டு இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 2 பார்சல்களில் இருந்து ரூ. 5 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுர்ந்த 105 போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

Tamil Nadu youths targeted by drug gangs? Is a pill 5 thousand to 50 thousand rupees?

பார்சலில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios