Tamil Nadu Terrorists Thoothukudi fire Pon.Radhakrishnan
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். இது தமிழர்களுக்கு அளிக்கப்படும் கவுரவமாக அமைகிறது. அரசு இதனை விழாவாக மட்டும் நடத்தாமல் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு புதிய விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி இளம் கலைதுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என பொன்.ராதா கூறினார்.
பிறகு தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு குறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தை திசை திருப்பியதால் தான் துப்பாக்கி சூடு நடைபெற்று என பகீர் தகவலை கூறியுள்ளார்.
மீனவர்கள் மிகப்பெரிய பாதிப்பு அடைந்து இருப்பதாக தூத்துக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற பயங்கரவாதம் குறித்து கேள்வி எழுப்பாத திமுகவும் 13 பேர் மரணத்திற்கு காரணம் என்றார். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருப்பதால்தான் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதம் குறித்து பேச தயங்குகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் சாவதை பார்க்க பிணந்தின்னி கழுகுகளை போல பயங்கரவாதிகள் காத்து கிடக்கின்றனர்.

மேலும் தனது கடமையை ஒழுங்காக செய்யாததால் திமுக தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. திமுகவை மக்கள் புறந்தள்ள வேண்டும்.திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்படுகின்றனர், அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக கேள்வி கேட்பது இல்லை, என கூறினார். மேலும் தமிழகத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு பெயர்கள் மற்றும் இயக்கங்கள் மூலமாக வலம் வருகின்றனர், சமூக வலைதளங்கள் ஊடகங்கள் மூலமாகவும் வலம் வருகின்றனர்.
