தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடி மாற்றம்.. யாருக்கு எந்த துறை.. இதோ முழு தகவல்கள்..!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. இந்நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
புதிய அமைச்சராக உதயநிதி பதவியேற்ற கையோடு சில அமைச்சர்களுக்கு துறை ரீதியான இலாக்கா மாற்றப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
* புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு
* கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வனத்துறை அமைச்சராக இருந்த ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
* நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு