கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுளை மறைக்க முடியும். அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின் வெளிவரும்.


2021 ஏப்ரல் மாதத்துக்கு பின் தமிழக அமைச்சர்கள் ஊழல் வெளிவரும் என்றும் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அமைச்சரவை குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''குரூப்-4 தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை. அரசன் எவ்வழியோ முறைகேடும் அவ்வழியிலயே நடக்கிறது, எடப்பாடி பழனிசாமி ஆட்சி கம்பெனிபோல் நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.
தமிழக அரசுத் துறைகளில் நடைபெறும முறைகேடுகள் குறித்து தி.மு.க-வுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் அறிக்கை மோதல் நடக்கிறது. கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுளை மறைக்க முடியும். அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின் வெளிவரும்.


ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் அமைச்சர்களின் தலையீடு உள்ளது. துறைகளில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி நேர்மையான அதிகாரிகளை நியமிக்கச் சொன்னதால்தான் எங்களுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் அப்போது சண்டை போட்டனர். எடப்பாடி தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. மாநகராட்சித் தேர்தல் தேதி அறிவிப்பது சந்தேகம்தான்'' என்றார்

T Balamurukan