அரசு விளம்பரங்களில் திரைப்பிரபலங்கள் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது டெங்கு விழிப்புணர்வுக்காக உள்ளாட்சித்துறை சர்பில், அரசுப் பள்ளி  மாணவிகளை வைத்து பிரச்சார விளம்பரப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

குறிப்பாக விளம்பரங்கள் என்றாலே, சினிமா பிரபலங்களை வைத்து எடுப்பதுதான் வழக்கம்.  அப்படி எடுத்தால்மட்டுமே  மக்களும் அதை பின்பற்றி அதன்படி நடப்பர் என்பதும் ஒரு வரையறுக்கப்படாத விதியாகவே இருந்துவருகிறது. ஆனால் இன்று அந்த வரைகளையெல்லாம் உடைத்து அக் குறிப்பிட்ட பிரச்சனைகளில் பாதிக்கும் மக்களே வைத்தே அந்த விளம்பரங்கள் உருவாக்கப்பட்டால் அதன் தாக்கம் அதிமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும் என்ற புது  உத்தியை கையில் எடுத்துள்ளார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி.

  

பெரும்பாலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பெரியவர்களைவிட அதிகம்,  இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர்.  அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கின்றனர் என்பதால் இப்போது அந்த மாணவர்களைக் கொண்டே இவ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து காட்டியுள்ளார் அமைச்சர்.  இந்த வீடியோவில் தோன்றும் மாணவிகள் இச்சமூகத்திற்கு அறிவுரைகள் சொல்லுவதுடன் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மட்டுமே உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அன்பு கட்டளை வைக்கின்றனர். இந்த வீடியே தற்போது வெளியாக அனைத்து தரப்பினரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோ உருவாக காரணமாக இருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக சுகாதாரத்துறையையும் மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர். 

சில லட்சங்களை செலவுசெய்து  சினிமா ஸ்டார்களை வைத்து எடுப்பதை விட,  மக்களை வைத்தே அதிலும் குறிப்பாக மாணவர்களை வைத்தே  பிரச்சாரம் செய்து அசத்தியிருப்பது, பாரட்டப்படுகிறது. எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்தித்து புதுமைகளை செய்யும் அமைச்சர் என்று பாராட்டப்படும்  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 

ஏற்கனவே  மழைநீர் சேமிப்பு குறித்து மழைநீர்! உயிர்நீர்! என்ற தத்துவதோடு நமக்காக... நாட்டுக்காக... நாளைக்காக... என்ற முழக்கத்தோடு டெங்கு ஒழிப்பில் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் களத்தில் குதித்துள்ளார் அமைச்சர் வேலுமணி.மாணவர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இதை வெறும் விளம்பரமாக மட்டும் பார்க்காமல் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நம் சுகாதாரத்தை பேணி காப்பதுடன், நமது இருப்பிட பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வதும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.