நடிகர் விஜய் மட்டுல்ல யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று சென்னையில் நேற்று பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிடார்.


இது குறித்து சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். விஜயை முன்னிலைப்படுத்துவது சீமானின் கருத்து. ஆனால், எங்களைப் பொறுத்தவரை யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் இயக்கம்தான் அதிமுக. எம்.ஜி.ஆரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பலரும் ரத்தம் சிந்தி உருவாக்கிய இயக்கம் அதிமுக என்கிற எஃகு கோட்டை” என்று அதற்கு பதிலளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, 100 நாட்களில் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால். 10 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்தார். அவர் மறைந்தபோது கட்சி முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். அப்போதும், ஜெயலலிதா தலைமையில் நான்கு முறை வெற்றிபெற்றோம். தற்போது ஆட்சியில் இருந்துவருகிறோம். இன்னும் 100 வருடங்கள் வரை இது தொடரும். ஆகவே, குப்பன், சுப்பன், ராமன் என எவன் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. யார் யாரோடு கூட்டணி வைத்தாலும் எங்களை அசைக்க முடியாது. நிரந்தரமாக மக்கள் மனதில் இடம்பெற்றவர்கள் நாங்கள் தான் என்று அதிரயாக தெரிவித்தார்.