Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டு இஸ்லாமிய பெண்கள் மோடிக்கு ஓட்டுபோடும் நிலை வரப்போகுது.. டெல்லி ராஜகோபாலன் அதிரடி.

அவருக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை உருவாகும், ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக திமுக அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது, ஆனால் வட இந்தியாவில் பொருத்தவரையில் பிரதமர் மோடி செல்வாக்கு நிறைந்தவராக இருக்கிறார். எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் அவர் மக்களை சந்திப்பவராக இருக்கிறார். 

Tamil Nadu Islamic women are going to vote for Modi .. Delhi Rajagopalan Predict .
Author
chennai, First Published Feb 21, 2022, 12:39 PM IST

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்கும் நிலை உருவாகப் போகிறது என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறியுள்ளார். முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்திய பிறகு உத்திரப்பிரதேசம், பீகாரில் இஸ்லாமிய பெண்கள் நரேந்திரமோடிக்கு எப்படி அதிக அளவில் வாக்களிக்கிறார்களோ அதேபோன்று நிலை தமிழகத்திலும் உருவாகும் என அவர் கூறியுள்ளார். 

வட இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருந்து வந்தாலும் தென்னிந்தியாவிலும் கால் பரப்ப அக்கட்சி முயற்சித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாஜகவின் முயற்சிகள் பலனளித்துள்ள நிலையில், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்காட்சியால் வளரமுடியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நுழையவே முடியவில்லை, இது அக்கட்சிக்கு பெரும் குறையாகவே இருந்து வருகிறது. நாட்டையே ஆளும் தங்களால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அக்கட்சிக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு என தனித்துவத்தை உருவாக்கும் முயற்சிகள் அக்காட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . கடந்த  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் முகாமிட்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தனர்.

Tamil Nadu Islamic women are going to vote for Modi .. Delhi Rajagopalan Predict .

ஆனால் அது பெரிய அளவிற்கு கைகொடுக்கவில்லை. கழகங்கள் இல்லாத ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம் என்று பாஜக கடந்த சில ஆண்டுகளாக முழங்கி வருகிறது. ஆனால் தமிழக மக்கள் அக்காட்சியை அங்கீகரிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனாலும் அக்கட்சி எத்தனையோ பகிரத முயற்சிகளை மேற்கொண்டும் வருவதுடன், தமிழகத்தில் கால் ஊன்றாமல் விடமாட்டோம் என கங்கணங்கட்டி காட்டி வருகிறது. தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன், அண்ணாமலை என அடுத்தடுத்து மாநில தலைவர்கள் மாற்றப்பட்டும் பெரிய அளவிற்கு பலனில்லை. இதே நேரத்தில் மறுபுறம் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் திமுக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது, திமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் திட்டங்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதால் திமுகவை  வீழ்த்த  வேண்டும்  என பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது, அதிலும் பலனில்லை. இந்நிலையில்தான் எதிர்க்கட்சியான அதிமுகவை காட்டிலும் பாஜக திமுக அரசையும், முக ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

தென்னிந்தியாவை பொருத்தவரையில் பாரதிய ஜனதா மதவாத காட்சி என்ற புரிதல் மக்கள் மத்தியில் வேறூன்றி இருப்பதே பாஜக இங்கு காலூன்ற முடியாமல் தவிப்பதற்கு காரணமாக உள்ளது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் சூழல் இருந்து வருவதால் பாஜகவால் தென்னிந்தியாவில் சோபிக்க முடியவில்லை. ஆனால் வட இந்தியாவைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவு கணிசமாக இருந்து வருகிறது. அங்கு இஸ்லாமியர்களை கவரும்வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ட்ரிபிள் தலாக், முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்தது முதல் பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் வட இந்தியாவில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். முத்தலாக் தடை சட்டம் திருமண வாழ்க்கைக்கு பாதுகாப்பான சட்டம் என்ற உணர்வை இஸ்லாமிய பெண்கள் பெற்றுள்ளதால் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து வருகின்றனர். ரக்ஷாபந்தன் தோறும் இஸ்லாமிய பெண்கள் பிதமர் மோடிக்கை ராக்கி அனுப்புவது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil Nadu Islamic women are going to vote for Modi .. Delhi Rajagopalan Predict .

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பாஜக தலைவர்கள் தமிழகத்தில் களமிறங்க உள்ளதாகவும், மோடி அமித்ஷா போன்றோர் தமிழகத்தில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்தலாக் தடை சட்டம் அதனால் இஸ்லாமிய பெண்களின் மோடி ஆதரவு கான்செப்டை வட இந்தியாவில் பாஜகவுக்கு கைகொடுத்துள்ளதே போல விரைவில் தமிழகத்தில் கைகொடுக்கும் என டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன், வட இந்தியாவில் முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் மத்தியில் மோடிக்கு எந்த அளவு ஆதரவு அதிகரித்துள்ளதோ, அதேபோன்ற ஆதரவு ஆந்திராவில், தெலுங்கானாவில், தமிழகத்தில், கேரளாவில் விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் கவனம் வரும் மே மாதம் முதல் தமிழகத்தில் மீது திரும்பு உள்ளது. அப்போது பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்படுவர்

Tamil Nadu Islamic women are going to vote for Modi .. Delhi Rajagopalan Predict .

அவருக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை உருவாகும், ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக திமுக அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது, ஆனால் வட இந்தியாவில் பொருத்தவரையில் பிரதமர் மோடி செல்வாக்கு நிறைந்தவராக இருக்கிறார். எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் அவர் மக்களை சந்திப்பவராக இருக்கிறார். ஆனால் மு.க ஸ்டாலினால் ஏன் அது முடியவில்லை? குறிப்பாக தமிழக பாஜக, அண்ணாமலை முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்  தேசியத் தலைவர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா, மோடி உள்ளிட்டோர் பக்கபலமாக இருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் அண்ணாமலை சொல்லுகிற ஒவ்வொரு கருத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் பயந்துகொண்டு பதில் சொல்கிற நிலைமையில் திமுக இருக்கிறது. 8மாத ஆட்சியில் திமுக பாஜகவை கண்டு பயப்படுகிறது என்பதை தேசிய பாஜகவினர் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios