நாட்டிலேயே கல்வியில் தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக  திகழ்கிறது என  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு திண்டலில் வேளாளர் மகளிர் கல்லூரியின் ஆண்டு பொன்விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசின் நடவடிக்கையால் தான் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார். கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.382 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உயர் கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்காக தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சீரிய முயற்ச்சியில் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படதால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தில் உயர்ந்துள்ளதுடன் ,கல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது என்றார், நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றும் பெருமைபட கூறினார்.