Asianet News TamilAsianet News Tamil

என்ன ஒரு தியாகம்.. ஆக்சிஜன் சிகிச்சையை விட்டுக்கொடுத்த செவிலியர் மரணம்.. வேதனையில் கலங்கும் எடப்பாடியார்..!

மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே  நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tamil Nadu is saved only by the sacrifices of the front line workers... edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published May 25, 2021, 12:42 PM IST

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த சென்னை மாநகராட்சி சுகாதார செவிலியர் பவானி மறைவுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

Tamil Nadu is saved only by the sacrifices of the front line workers... edappadi palanisamy

28-04-2021 அன்று, அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து,12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே  நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios