Asianet News TamilAsianet News Tamil

கொரோனா 3வது அலையே வந்தாலும் தமிழகம் தயார்... அசால்டு காட்டும் அமைச்சர் கே.என் நேரு..!

கொரோனா 3வது தொற்று அலையை மேற்கொள்ள தமிழகம் தயாராகியிருக்கிறது என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

Tamil Nadu is ready even if the Corona 3rd wave arrives ... Minister KN Nehru
Author
Tamil Nadu, First Published Jun 5, 2021, 11:46 AM IST

 

கொரோனா 3வது தொற்று அலையை மேற்கொள்ள தமிழகம் தயாராகியிருக்கிறது என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பிலாய் மாவட்டத்திலிருந்து ரயில் மூலமாக 80 டன் ஆக்சிஜன் திருச்சி இரயில் கூட்ஸ்யார்டிற்கு வந்தது. தமிழகத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு ஒரு சில மாவட்டங்களில் ஏற்பட்டிருந்த நிலையில் அவற்றை சரிசெய்ய வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிசனை பெற முயற்சி செய்து வருகிறது.Tamil Nadu is ready even if the Corona 3rd wave arrives ... Minister KN Nehru
16 தன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

Tamil Nadu is ready even if the Corona 3rd wave arrives ... Minister KN Nehru

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை இருப்பினும் கையிருப்பு வைத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழகம் சமாளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோய் தாக்கம் அதிகளவில் குறைந்து வருகிறது. படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் தொடர்ந்து கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios