Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் பெரியார் மண்.. இந்துத்துவா எடுபடாது என்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது... கோலாகல சீனிவாசன்.

மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாறி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அதேபோல் சென்னையில் மொத்தம் 198 வார்டுகளில் போட்டியிட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேபோல் 198 வேட்பாளர்களை களம் இறங்கினாலும் தீவிர இந்துத்துவ ஆதரவாளரான உமா ஆனந்தறே வெற்றி பெற்றிருக்கிறார்.

Tamil Nadu is Periyar soil .. Hearafter cant say that Hindutva will not workout  ... Kolagala Srinivasan.
Author
Chennai, First Published Feb 26, 2022, 11:59 AM IST

தமிழகம் பெரியார் மண் இந்துத்துவா எடுபடாது என்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது  என்றும், அந்த இமேஜை எல்லாம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அடித்து உடைத்து விட்டது என்றும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிர இந்துத்துவா எடுபட்டிருப்பதுதான் விளைவுதான் உமா ஆனந்தனின் வெற்றி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கால் பரப்பி மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தாலும் தென்னிந்தியாவில் நினைத்த அளவிற்கு சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குறை நீண்டகாலமாக பாஜகவுக்கு இருந்துவருகிறது. ஒருவழியாக கர்நாடகத்தின் ஆட்சியை கைப்பற்றினாலும் அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில்  பாஜகவின் மந்திரம் பலிக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நுழையகூட முடியவில்லை என்ற ஏமாற்றம் நீண்ட காலமாகவே பாஜகவுக்கு இருந்து வருகிறது. திருத்தப்பட்ட வேளாண் சட்டம், நீட் தேர்வு , இந்திய குடியுரிமை சட்டம் என மத்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும் கடுமையாகவும் மூர்க்கமாக தமிழகம் எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக திமுக அதை எதிர்ப்பதில் முதல் வரிசையில் இருக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விடுதலை கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள்,  காங்கிரஸ் போன்றவையும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் கால் பதிப்பது என்பது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

Tamil Nadu is Periyar soil .. Hearafter cant say that Hindutva will not workout  ... Kolagala Srinivasan.

மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது பாஜக, அக் கட்சி வந்துவிட்டால் மதக்கலவரம் தான் நடக்கும், வட இந்தியா போல தமிழகமும் கலவர பூமியாக மாறிவிடும், சாதிமத பூசல்கள் மேலோங்கும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கம் தலைத்தூக்கும் என்றெல்லாம் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்கள் தமிழகத்தில் வலுவாக இருந்து வருகிறது, இதனால் பல ஆண்டுகளாக பாஜக தமிழர்கள் மத்தியில் அந்நியப்பட்டு நிற்கிறது. அது ஏதோ வட மாநில கட்சி என்ற உணர்வே தமிழர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜக எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழர்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்க தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் அது பிராமணர்களுக்குரிய கட்சி என்ற பிம்பம் இருந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், அண்ணாமலை என  தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநிலத் தலைவர் பதவியை கட்சி வழங்கப்பட்டு வரும்நிலையில் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது.

இது நமக்கான கட்சி என்ற உணர்வு மக்கள் மனதில் மெல்ல துளிர்விட தொடங்கியுள்ளது. இளைஞர்கள் பெண்கள் அதிக அளவில் பாஜகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்றது முதல் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அண்ணாமலைக்கு  சமூகவலைதளத்தில் ஆர்மி அமைக்கும்  அளவுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி நமக்கான கட்சி என்ற உணர்வு தமிழக மக்கள் மத்தியில் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் அதிரடியாக இறங்கினால் அது எடுபடாது என்று புரிந்து வைத்துள்ள பாஜக தேசியத் தலைமை, மக்களை கவர வெண்மையான போக்கை முன்னெடுத்து வருகின்றனர். இது நல்ல பலன் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அதன் எதிரொலியாக தான் அதிமுகவுடனிருந்து பிரிந்து தேர்தலை சந்தித்துள்ள நிலையிலும் பாஜக அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளதற்கு காரணம். 

Tamil Nadu is Periyar soil .. Hearafter cant say that Hindutva will not workout  ... Kolagala Srinivasan.

அதிமுக முதுகில் சவாரி செய்யும் காட்சி, நோட்டாவுடன் கூட போட்டி போட முடியாத கட்சி என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இல்லை இல்லை பாஜகவுக்கு என்று தனி செல்வாக்கு இருக்கிறது, நிச்சயம் தமிழக மக்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு வந்ததன் எதிரொலியாக நடந்து முடிந்த நகராட்சி மன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது, 19 வார்டுகளில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 2வது இடம் பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டு மொத்தம் 309 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. நாகர்கோவில்  மட்டும் 11 வார்டுகளில் பாஜக கைப்பற்றியுள்ளது தமிழகம் முழுவதும் பரவலாக பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மொத்தம் 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் 22 வார்டுகளில் பாஜக வென்றிருக்கிறது. நகராட்சி பொறுத்தவரையில் மொத்தம் 57 வார்டுகளில் பாஜக கைப்பற்றியுள்ளது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 234 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது.

மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாறி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அதேபோல் சென்னையில் மொத்தம் 198 வார்டுகளில் போட்டியிட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேபோல் 198 வேட்பாளர்களை களம் இறங்கினாலும் தீவிர இந்துத்துவ ஆதரவாளரான உமா ஆனந்தறே வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகம் பெரியார் மண், இந்துத்துவா இங்கு எடுபடாது என்று கூறி வந்தவர்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கை பேசும் ஒருவர்தான் வென்றுள்ளார், ஏன் கோச் சேவையே ஆதரிக்கிறேன் என்று பேசிய பெண்தான் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கவுன்சிலராக வாகை சூடி இருக்கிறார். அப்படி எனில் இந்துத்துவா எடுபடாது என்று சொல்வது பொய்யாகியிருக்கிறது என்றே எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் இதை மேற்கோள்  காட்டி கருத்து கூறியுள்ள மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் பாஜகவுக்கு எதிராக செய்யப்பட்டு வந்த  பிரச்சாரங்கள் உள்ளாட்சித் தேர்தலில் உடைக்கப்படுகிறது.

Tamil Nadu is Periyar soil .. Hearafter cant say that Hindutva will not workout  ... Kolagala Srinivasan.

இது பெரியார் மண், இந்துத்துவா எடுபடாது என்று பேசுவது தான் எடுபடாமல் போயுள்ளது எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிர இந்துத்துவத்தை முன்னெடுப்பதே பாஜகவிற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளார். மிதவாத அரசியலை கையில் எடுப்பதா அல்லது அதிரடி இந்துத்துவத்தை அரங்கேற்றுவதா என்பதையும் அண்ணாமலை தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் என்ன யுக்தியை பாஜக கையில் எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Follow Us:
Download App:
  • android
  • ios