Asianet News TamilAsianet News Tamil

பால் விலை உயர்வு ஏன்..? முதல்வர் எடப்பாடியின் அதிரடி சரவெடி விளக்கம்..!

 பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விலை உயர்த்தவில்லை. விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 

Tamil Nadu govt raises Aavin milk price... edappadipalanisamy speech
Author
Tamil Nadu, First Published Aug 18, 2019, 12:30 PM IST

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 

கொள்முதல் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Tamil Nadu govt raises Aavin milk price... edappadipalanisamy speech

இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளிக்கையில், பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விலை உயர்த்தவில்லை. விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 Tamil Nadu govt raises Aavin milk price... edappadipalanisamy speech

மேலும், கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமானதல்ல, இந்த கஷ்டத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். கால்நடை தீவனங்கள் ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. மழை அளவை பொறுத்துதான் மேட்டூர் அணையில் நீர் திறப்பு உயர்த்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios