விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு அமைதி காத்து வந்தவர் மீண்டும் தனது அதிரடி பேச்சுக்களை பேசத் தொடங்கியிருக்கிறார் . தமிழக மக்களை குடிக்க பழக்கிய ஆட்சி திமுக.அதை குறைக்கிற ஆட்சி அதிமுக என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளளார்.

 பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்கள் சந்தித்தார்.  அப்போது பேசியவர்... "ஸ்டாலினின் வலதுகரமாக திகழும் ஆர்.எஸ்.பாரதி பேசுவது அத்தனையும் தீண்டாமை பேச்சு. மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தீண்டாமையை உருவாக்கும் கட்சி திமுக.அவர்களது கூட்டணியில் திருமாவளவன் போன்ற போராளிகள் மனக் கசப்புடன் இருக்கின்றனர். ஒருநாள் அவர் வெடித்து சிதறுவார். அதிமுக ஆட்சியில் எல்லோரும் சமம் என்ற நிலை தான் உள்ளது.

அதிமுகவினர் லாரி, லாரியாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு வழங்கினர். ஆனால் திமுகவினர் மொத்தமாக ஆயிரம் பேருக்காவது வழங்கி இருப்பார்களா?மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக. பிறரை குற்றம் சொல்லியே பிழைப்பு நடத்தும் இயக்கம் திமுக. பொதுமக்களுக்காக ஒரு ரூபாய் செலவழித்தால் அதற்காக திமுக 100 ரூபாய் விளம்பரத்துக்காக செலவழிக்கிறது.

தமிழக மக்களை குடிக்க பழக்கிய ஆட்சி திமுக. சாராயத்தை கொண்டு வந்த ஆட்சி திமுக. அதை படிப்படியாக குறைக்கும் ஆட்சி தான் அதிமுக. தொண்டு உள்ளம் கொண்ட அதிமுகவை குறை சொல்ல கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உரிமை உண்டு. ஆனால் திமுகவுக்கு தகுதி இல்லை என்றார்.