பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,  சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சொத்து வரி உயர்வு

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 2021-22ம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் சொத்து வரி பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருப்பதால், வருவாய் குறைந்து, உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் , மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 - 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 - 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும், 1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது நியாயமற்றது

இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது.

மக்கள் மீது தாங்க முடியாத சுமை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது.

சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.