அதிகாரம் இருக்குது என்பதால் மமதையில் ஆட்சியாளர்கள் ஒவரா ஆடாதீங்க.. திமுகவை எச்சரிக்கும் பாஜக..!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திபடுத்தும் உள்நோக்கம் கொண்டது.  

Tamil Nadu government denial of permission for RSS procession.. narayanan thirupathy Condemnation

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திபடுத்தும் உள்நோக்கம் கொண்டது.  மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடை பெற்று வருகின்றன எனவும், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்றும், அதே நாளில் வேறு சில அமைப்புகளும் சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க;- ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுப்பு... சீமான் வரவேற்பு!!

Tamil Nadu government denial of permission for RSS procession.. narayanan thirupathy Condemnation

அண்மைக்காலத்தில்  ஹிந்து பெண்கள் குறித்து அவதூறு பேசி, மத உணர்வுகளை தூண்டியது  திமுகவின் துணை பொது செயலாளர் ஆ.ராஜா தான் என்பதை உலகறியும். ஹிந்து பெண்கள் குறித்து அவர் பேசிய தரக்குறைவான பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாத திமுக அரசு, அதை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்வது கேலிக்கூத்து.  தடை செய்யப்பட்டதால் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல், அதை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்வது, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முடியாத மாநில அரசின் இயலாமையின் வெளிப்படுத்துகிறது.

Tamil Nadu government denial of permission for RSS procession.. narayanan thirupathy Condemnation

அதே நாளில் வேறு சில அமைப்புகள் சங்கிலி தொடருக்கு அனுமதி கேட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த அமைப்புகளை திமுகவே தூண்டி விட்டு அனுமதி கேட்க வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

இதையும் படிங்க;-  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும்.. திமுகவை அலறவிடும் வானதி..!

Tamil Nadu government denial of permission for RSS procession.. narayanan thirupathy Condemnation

தேச பக்தி, தெய்வ பக்தி, ஆன்மீக, கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைகளையே உயிர்மூச்சாக கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு அஞ்சி, நடுங்கி கொண்டிருக்கின்றன திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள். அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் செயல்படுவார்களேயானால், அவர்கள் நீதியால் தோற்கடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios