Asianet News TamilAsianet News Tamil

எந்த மாதிரி அழுத்தம் கொடுத்தாலும் அதை செயல்படுத்தக் கூடாது.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ்.!

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும். 

Tamil Nadu does not need an eight-lane project...ramadoss
Author
Tamil Nadu, First Published Jan 22, 2022, 12:13 PM IST

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்; அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன; முதலமைச்சர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Tamil Nadu does not need an eight-lane project...ramadoss

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும். 

Tamil Nadu does not need an eight-lane project...ramadoss

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை  மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எந்தத் திட்டப்பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது. 

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் கூட, அதை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்; அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios